அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-02 17:20 GMT

பழனி வட்டார அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில், பழனி திருநகரில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு கூடாது என்றும், நீண்ட ஆண்டுகளாக பணிசெய்யும் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல் வடமதுரை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் செல்வ தனபாக்கியம் தலைமையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்