அங்கன்வாடி பணியாளர்கள் நூதன போராட்டம்

காலி பணியிடங்களை நிரப்ப கோரி அங்கன்வாடி பணியாளர்கள் நூதன போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-03 18:45 GMT

ஊட்டி, 

அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில், ஊட்டி ஏ.டி‌.சி. திடலில் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் சசிகலா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. நிர்வாகி சுந்தரம் கலந்து கொண்டு பேசினார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது,

அங்கன்வாடி மையங்களில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான முழு தொகையை வழங்க வேண்டும். அரசு நியமிக்கப்பட்ட பணிகளை தவிர மற்ற அரசு பள்ளியில் உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தடை செய்ய வேண்டும். 10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்களை ஒருங்கிணைப்பதை தவிர்க்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது என்றனர். இதில் மாவட்ட துணை தலைவர் கவிதா, விஜயன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்