அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-10 19:00 GMT

அங்கன்வாடி மையங்களை இணைப்பது, சிறிய அங்கன்வாடி மையங்களை மூடுவது என்ற திட்டத்தை கைவிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடிகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். அங்கன்வாடிகளில் பயன்படுத்துவதற்கு புதிய தரமான எடைக் கருவிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் தவமணி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பிரேமா, மாநில செயற்குழு உறுப்பினர் சித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் மாலதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்