அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-04-25 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் த.ஜெயராணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.சந்திரா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் இரா.பேச்சிமுத்து, பொருளாளர் ச.அப்பாத்துரை, மாவட்ட குழு உறுப்பினர் இல.ராமமூர்த்தி ஆகியோர் பேசினர்.

கோரிக்கை

போராட்டத்தில் 10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையங்களாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையங்களை பிரதான மையங்களோடு இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும். 2 அல்லது மூன்று 3 மையங்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி வேலை பளுவை அதிகரிப்பதை நிறுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து திரளான அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட பொருளாளர் எம்.ஜெயலெட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்