அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்

Update: 2023-09-13 19:15 GMT

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்தர்ராணி தலைமையிலும் செயலாளர் பாண்டியம்மாள் முன்னிலையிலும் நடைபெற்ற போராட்டத்தினை மாநில செயலாளர் டெய்சி தொடங்கி வைத்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தேவா சிறப்புரை ஆற்றினார். அங்கன்வாடி மையங்களுக்கு கர்ப்பிணி தாய்மார்களும் பாலூட்டும் தாய்மார்களும் வரும் நிலையில் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. ஏற்கனவே கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி நடந்த பேச்சுவார்த்தையின் போது இந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்