அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-07-09 19:20 GMT

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க திருச்சி மாவட்ட 5-வது மாநாடு நேற்று திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கலைசெல்வி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாநில பொதுச்செயலாளர் டெய்சி பேசினார். மாநாட்டில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு உணவு சமைப்பதற்கு தேவையான சிலிண்டர்களுக்கு முழு தொகையும் வேண்டும். மேலும் அனைத்து பணிகளையும் பதிவு செய்வதற்கு புதிய செல்போன் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்