அங்கன்வாடி மையம், ரேஷன் கடை
அங்கன்வாடி மையம், ரேஷன் கடை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
சாத்தூர்
சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை ஊராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டியபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் கோணம்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை ஆகியவற்றை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ரகுராமன்எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சாத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் செல்லத்தாய் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோட்டாட்சியர் அனிதா, வட்டாட்சியர் வெங்கடேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளைச்சாமி, விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செந்தில்குமார், கூட்டுறவு சார்பதிவாளர் விஜயலட்சுமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கடற்கரைராஜ், முருகேசன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், பாலகிருஷ்ணன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மேட்டமலை ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி, கோணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சத்யா மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.