அணிலாடி ஊராட்சியில்ரூ.10 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம்அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்

அணிலாடி ஊராட்சியில் ரூ.10 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.

Update: 2023-03-16 18:45 GMT

செஞ்சி, 

செஞ்சி வட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அணிலாடி ஊராட்சியில் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு வல்லம் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த தாஸ், குலோத்துங்கன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சவுமியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பிலோமினாள் அருமைநாதன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்து பேசுகையில், தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் 20 மாத கால திராவிட மாடல் ஆட்சியில் தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார். இதில் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி பங்குத்தந்தை அந்தோணிசாமி, மாவட்ட கவுன்சிலர் செழியன், ஒன்றிய கவுன்சிலர் ரேணுகா வேலாயுதம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ், துணைத்தலைவர் ஆரோக்கியமேரி, ஒன்றிய பொருளாளர் தமிழரசன், நிர்வாகிகள் ராபர்ட், ஹென்ரி தாஸ், ஜெயசீலன், சூசைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்