ரூ.11 லட்சத்தில் அங்கன்வாடி மையம்
விக்கிரவாண்டி அருகே ரூ.11 லட்சத்தில் அங்கன்வாடி மையத்தை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி ஒன்றியம் வேம்பி ஊராட்சி பூண்டி கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது, இதற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். புகழேந்தி எம்.எல்.ஏ., ரவிக்குமார் எம்.பி., கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், ஒன்றியக்குழு தலைவர் சங்கீத அரசி ரவி துரை, துணை தலைவர் ஜீவிதா ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் அன்பழகி வரவேற்றார். விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் அவர், மின்வாரிய துறையில் வாரிசு நியமன அடிப்படையில் 4 பேருக்கு பணி நியமன ஆணை, சமூக நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிக்கு ஓய்வு உதவித்தொகை, தாட்கோ மானிய கடனில் ஒரு விவசாயிக்கு டிராக்டர் ஆகியவற்றை வழங்கினார்.
விழாவில் மாவட்ட செயற்பொறியாளர் ராஜா, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திர விஜய், செயற்பொறியாளர் மதனகோபால், உதவி செயற்பொறியாளர் அண்ணாதுரை, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, நாராயணன், தாசில்தார் இளவரசன், தனி தாசில்தார் ஜோதிவேல், பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம், துணை தலைவர் பாலாஜி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவி துரை, ஜெயபால், மாநில விவசாய அணி அமைப்பாளர் அன்னியூர் சிவா, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, அருணாசலம், முகிலன், செல்வம், கண்காணிப்புக்குழு எத்திராசன், வேம்பி ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி ரவி, சிற்றுராட்சிகள் சங்கத் தலைவர் சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.