நாச்சியாபுரத்தில் அங்காள பரமேஸ்வரி பூங்காவனத்து அம்மன் கோவில் தேரோட்டம்

நாச்சியாபுரத்தில் அங்காள பரமேஸ்வரி பூங்காவனத்து அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-02-24 17:23 GMT

சேத்துப்பட்டு

நாச்சியாபுரத்தில் அங்காள பரமேஸ்வரி பூங்காவனத்து அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள நாச்சாபுரம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி பூங்காவனத்தம்மன், 62-வது ஆண்டு மாசி மாத திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. அன்று கொடியேற்றப்பட்டது. மறுநாள் மயான கொள்ளை நிகழ்ச்சியும், 20-ந் தேதி பரமேஸ்வரி பூங்காவனத்து அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலாவும், 21-ந் தேதி புஷ்ப பல்லக்கில் பவனியும் நடந்தது.

23-ந் தேதி 108 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து அங்காள பரமேஸ்வரி பூங்காவனத்தம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அன்று இரவு வெள்ளித்தேரில் அலங்காரம் செய்து அம்மன் வீதி உலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மரத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி பூங்காவனத்தம்மன் எழுந்தருளி தேரோட்டம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். பின்னர் மீண்டும் கோவிலை தேர் சென்றடைந்தது. இரவு பேண்ட் வாத்தியம், நாதஸ்வரம், பம்பை உடுக்கையுடன் இசை நிகழ்ச்சியும் நாடகமும் நடந்தது.

நிகழ்ச்சியில் அண்ணாமலையார் இன்டேன் கியாஸ் ஏஜென்சி சத்யன் ரமணி பாய் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதனையொட்டி பல்வேறு கிராமத்திளை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு முன்பு பொங்கல் வைத்து படைத்து மா விளக்கு ஏற்றி வணங்கினர். ஏற்பாடுகளை நாச்சியாபுரம் கிராம பொதுமக்கள், தர்மகர்த்தாக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்