அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-26 18:30 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, மங்களமேடு அருகே ரஞ்சன்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர் திருவிழா கடந்த 18-ந்தேதி இரவு கொடியேற்றுதலுடன் தொடங்கியது. 19-ந்தேதி மயான கொள்ளை நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் தேரோடும் வீதிகளின் வழியாக சென்று மீண்டும் அதன் நிலைைய வந்தடைந்தது. அதனை தொடர்ந்து தீமிதித்தல் நடைபெற்றது. விரதமிருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்