அங்காள பரமேஸ்வரி அம்மன் சப்பர பவனி
குலசேகரன்பட்டினத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் சப்பர பவனி நடந்தது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்ட்டினம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் ெதாடங்கியது. 17-ந்தேதி இரவு 8 மணிக்கு மூன்று முகம் கொண்ட படலம் வீதி உலா வருதல் நடைபெற்றது. 18-ந் மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சப்பர பவனி நடைபெற்றது. இரவு 12 மணிக்கு மேல் கொடி இறக்கி கொடிமர பூஜை, பைரவர் பூஜை நடைபெற்றது. பேச்சியம்மன் பிரம்மராட்சதை அம்பாளுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அமுதுபடைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திருவிழா நாட்களில் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு காலை, மாலையில் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது