உலக நன்மைக்காக சிவகங்கையை சேர்ந்தவர் அங்க பிரதட்சணம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உலக நன்மைக்காக சிவகங்கையை சேர்ந்தவர் அங்க பிரதட்சணம் செய்தார்

Update: 2022-08-11 13:53 GMT

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சகணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

பக்தர்கள் கிரிவலம் செல்லும் கிரிவலப்பாதை 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று காலை 10.16 மணிக்கு தொடங்கியது.

பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்வது போன்று உலக நன்மைக்காக சிவகங்கையை சேர்ந்த கோரக்கர் சித்தர் ஆசிரமத்தை சேர்ந்த நிர்வாகி மண்டுகநாதபரமஹம்சர் என்பவர் நேற்று அங்க பிரதட்சணம் செய்தார்.

இவருடன் 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்