ஓடும் ரெயிலில் பயணிகளிடம் செல்போன் திருடிய ஆந்திர வாலிபர் கைது

ஓடும் ரெயிலில் பயணிகளிடம் செல்போன் திருடிய ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-24 21:49 GMT

சூரமங்கலம்:

செல்போன்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 41). இவர் கடந்த 22-ந் தேதி நள்ளிரவு காட்பாடி ெரயில் நிலையத்தில் இருந்து திருப்பூர் செல்வதற்காக ெரயிலில் பொதுப்பெட்டியில் ஏறினார். பின்னர் செல் போனை சார்ஜரில் போட்டுள்ளார்.

அதன்பிறகு சிறிது நேரம் கழித்து கண்விழித்து பார்த்தபோது, செல்போனை காணவில்லை. அதே சமயத்தில் அவரது இருக்கை அருகே அமர்ந்து இருந்த நபரையும் காணவில்லை. பின்னர் அந்த நபர் கழிப்பறை அருகே நின்று கொண்டிருந்தார்.

கைது

மேலும் அவரது பாக்கெட்டில் 4 செல்போன்கள் இருந்தன. அவற்றை அவர் பயணிகளிடம் திருடி வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து ரெயில் சேலம் ெரயில் நிலையம் வந்ததும், செல்போனை திருடிய நபர் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ்சேகர் (38) என்பதும், இவர் ெரயிலில் தூங்கும் பயணிகளிடம் செல்போன்களை திருடியதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆகாஷ்சேகரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்