மீனாட்சி அம்மன் கோவிலில் ஆந்திர அமைச்சர் ரோஜா தரிசனம்

மீனாட்சி அம்மன் கோவிலில் ஆந்திர அமைச்சர் ரோஜா தரிசனம் செய்தார்

Update: 2023-05-15 20:07 GMT


ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், அந்த மாநிலத்தின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா நேற்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ரோஜா, பொற்றாமரைக்குளத்தை சுற்றி வந்து அம்மன், சுவாமி சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார். சிலைகள், கலநயமிக்க தூண்களை கண்டு ரசித்தார். தரிசனம் முடித்து வெளியே வந்த ரோஜா நிருபர்களிடம் கூறும் போது, "மதுரை மீனாட்சி அம்மன் அருளால் 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது கோவிலுக்கு வந்து மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துள்ளேன். சொக்கரையும் கும்பிட்டுவிட்டு புதிய உத்வேகத்தோடு மக்களுக்கு நல்லது செய்ய சந்தோஷமாக செல்கிறேன்" என்றார்.

மேலும் அவரிடம் அரசியல் தொடர்பாக கேள்வி கேட்டபோது பதில் அளிக்க மறுத்து விட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்