கிரிவலத்துக்கு வந்த ஆந்திர பக்தர் ரெயில் நிலையத்திலேயே இறந்த சோகம்

கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வந்த பக்தர் ரெயில் நிலையத்திலேயேஇறந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2023-08-02 18:45 GMT

கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வந்த பக்தர் ரெயில் நிலையத்திலேயேஇறந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 50), எலக்ட்ரீசியன். இவர் பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்வதற்காக நண்பருடன் மன்னார்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் மாலையில் திருவண்ணாமலைக்கு வந்துள்ளார்.

அப்போது அவருக்கு திடீரென உடல் நல குறைபாடு ஏற்பட்டதில் மயங்கி விழுந்தார். பின்னர் அவர் ரெயில் நிலையத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவிக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிவலத்துக்கு வந்தபோது ரெயில்நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்