அந்தியூர், சத்தியமங்கலம் வழியாககர்நாடகாவுக்கு வாகன போக்குவரத்து
அந்தியூர், சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவுக்கு வாகன போக்குவரத்து தொடங்கியது
தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதை கண்டித்து கர்நாடக நீர் பாதுகாப்பு குழு சார்பில் பெங்களூருவில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடைெபற்றது. இதையொட்டி தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி தமிழக- கர்நாடக மாநில எல்லை பகுதியிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன.
அந்தியூர் வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்கள் அனைத்தும் தமிழ்நாடு-கர்நாடகா மாநில எல்லை பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று காலை 6 மணி முதல் அந்தியூர் வழியாக கர்நாடகாவுக்கு வாகன போக்குவரத்து தொடங்கியது. இதேபோல் சத்தியமங்கலம் வழியாகவும் கர்நாடகாவுக்கு அரசு பஸ்கள், லாரிகள் என அனைத்து வாகனங்களும் சென்று வந்தன.