லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டாள் உற்சவம்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டாள் உற்சவம்
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான யோக லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் உள்ளது.
இங்கு ஆண்டாள் உற்சவத்தை முன்னிட்டு ஆண்டாளுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் வெள்ளிக் கேடயத்தில் ஆண்டாள் எழுந்தருளி
மங்கள வாத்தியங்களுடன் கோவில் பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.