பழங்கால நடுகல் சிற்பம் கண்டெடுப்பு

சிவகாசி அருகே பழங்கால நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-13 18:45 GMT

சிவகாசி

சிவகாசி அருகே பழங்கால நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நடுகல் சிற்பம்

சிவகாசி அருகே உள்ளது திருத்தங்கலில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நாராயண பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான சிற்பங்களும், கல்வெட்டுகளும் உள்ளது. இந்நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்த கோவிலை சுற்றி உள்ள பகுதிகளை ஆராய்ச்சி செய்த போது சுமார் 300 வருடங்களுக்கு முந்தைய கற்சிற்பங்கள் கோவில் அருகே இருந்தது கண்டெடுக்கப்பட்டது.

உரிய முறையில் பராமரிக்காமல் இருந்த நிலையில் இந்த கற்சிற்பங்ள் மணலால் மூடப்பட்டது. இந்த நிலையில் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பாலச்சந்திரன் நேற்று காலை அந்த பகுதியை பார்வையிட வந்த போது கற்சிற்பம் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் இருந்தது.

இதை அமைச்சர் தங்கம் தென்னரசு கவனத்துக்கு கொண்டு சென்றதன் பேரில். மாநகராட்சி அதிகாரிகளை சம்பந்தப்பட்ட இடத்தினை சுத்தம் செய்து கற்சிலையை பாதுகாக்க உத்தரவிட்டார்.

பொதுமக்கள் பாா்வையிட்டனர்

இதனை தொடர்ந்து சிவகாசி மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று அங்கு இருந்த குப்பைகளை மணல் அள்ளும் எந்திரம் மூலம் அகற்றினர். சுமார் ஒரு மணி நேர முயற்சிக்கு பின்னர் 300 வருடத்திற்கு முந்தைய நடுக்கல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து இந்த நடுக்கடலை பார்வையிட்டனர்.

தொடர்ந்து இந்த பகுதி தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து நடுகல்லை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி கவுன்சிலர் ஸ்ரீநீதிகா மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார். போர்வீரன் மறைவை நினைவு படுத்தும் வகையில் இந்த நடுக்கல் செதுக்கப்பட்டதாக தொல்லியல் ஆராய்சியாளர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்