கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பணிநிலைப்பு வழங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கால்நடை உதவி மருத்துவர்களுக்கும் அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Update: 2023-05-17 10:28 GMT

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில், அனைத்துத் தகுதிகளுடன் கால்நடை உதவி மருத்துவர்களாக 11 ஆண்டுகளாக பணி செய்யும் 454 பேருக்கு பணிநிலைப்பு வழங்குவதற்கு மாற்றாக, அவர்கள் அடுத்த தலைமுறை பட்டதாரிகளுடன் போட்டித்தேர்வு எழுதி வெற்றி பெற்றால் தான் பணியில் தொடர முடியும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது ஏற்றுக்கொள்ள முடியாத சமூக அநீதி ஆகும். தற்காலிக கால்நடை மருத்துவர்கள் அனைவருக்கும் தேவைக்கு அதிகமான கல்வித் தகுதியும், அனுபவமும் உள்ளது; அவர்கள் தங்களின் இளமையை தொலைத்து அரசுக்காக பணி செய்து உள்ளனர். இப்போதுள்ள வயதில் அவர்களால் வேறு எந்த பணிக்கும் செல்ல முடியாது. இவற்றைக் கருத்தில் கொண்டு விதி 10(ஏ)(ஐ)-ன்படி நியமிக்கப்பட்டு, இப்போது பணியில் தொடரும் 454 கால்நடை உதவி மருத்துவர்களுக்கும் அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்