அனந்தபுரி, ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் எண்கள் மாற்றம்
அனந்தபுரி, ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை, மதுரை வழியாக சென்னை வரை இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவற்றின் எண்கள் வருகிற 6-ந் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகின்றன. அதன்படி, சென்னை-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டிஎண்.16823, கொல்லம்-சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் வ.எண்.16824 என மாற்றம் செய்யப்படுகிறது. சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் வ.எண்.16751, ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வ.எண்.16752 என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயில்களில் வண்டி எண் மாற்றம் ரெயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.