ஆனைமலை ஒன்றிய குழு கூட்டம்

ஆனைமலை ஒன்றிய குழு கூட்டத்தில் அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

Update: 2023-10-05 19:00 GMT
ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் சாந்தி கார்த்திக் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள் வார்டில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய வலியுறுத்தி பேசினார்கள். மேலும் அதிகாரிகளிடம் கோரிக்கைளை தெரிவித்தால் எந்த பதிலும் அளிப்பதில்லை. மேலும் மழைக்காலத்தில் கொசு தொல்லை அதிகமாக உள்ளதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது என்றனர்.இதுகுறித்து ஒன்றிய குழு தலைவர், கவுன்சிலர்களின் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. பேசும் போது கூறுகையில், சோமந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 700 மாணவர்கள் படித்த இடத்தில் தற்போது 290 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். எனவே பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து தரத்தை உயர்த்த வேண்டும். மேலும்வால்பாறைக்கு செல்ல ஆழியாறு சோதனை சாவடியில் மாலை 6 மணிக்கு மேல் வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பேசி தற்போது இரவு 8.30 மணி வரை வாகனம் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார். கூட்டத்தில் ஆணையர் ஆனந்த் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.





Tags:    

மேலும் செய்திகள்