ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்
ஆனைமலை
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஆனைமலை ஒன்றியத்தை சுற்றியுள்ள 70 விவசாயிகள் 360 மூட்டை கொப்பரையை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது. தாராபுரம், காங்கேயம், உள்பட பிற பகுதியில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளா பகுதியை சேர்ந்த 6 வியாபாரிகள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் 172 மூட்டை முதல் ரக கொப்பரை தேங்காய் கிலோ ஒன்று 74 ரூபாய் 75 காசுகள் முதல் 81 ரூபாய் 15 காசுகள் வரை ஏலம் விடப்பட்டது. 188 மூட்டை 2-ம் ரக கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றிற்கு 52 ரூபாய் 60 காசுகள் முதல் 72 ரூபாய் 75 காசுகள் வரை ஏலம் போனது. தற்போது தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரை தேங்காய் வெளி சந்தைக்கு வருவதன் காரணமாக கிலோவிற்கு ரூ.4 ரூபாய் 10 காசுகள் விலை குறைந்துள்ளது. மேலும் பனிப்பொழிவு காரணமாக கடந்த வாரத்தை விட 54 மூட்டைகள் வரத்து குறைவாக வந்துள்ளது. இந்த ஏலத்தை கோவை விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் சாவித்திரி ஆய்வு செய்தார்.