சாலையில் வேரோடு சாய்ந்த புளியமரம்
ெசங்கம் அருகே சாலையில் வேரோடு சாய்ந்த புளியமரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கம்,
செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வந்தது.
இந்நிலையில் இன்று பிற்பகல் செங்கம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காயம்பட்டு கூட்ரோடு பகுதியில் சாலையோரம் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது.
அப்போது அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. சாலையின் நடுவே வேரோடு புளியமரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.