தீயில் கருகி மூதாட்டி சாவு

தீயில் கருகி மூதாட்டி சாவு

Update: 2023-03-16 20:13 GMT

தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டி மேலஅம்பலக்காரதெருவை சேர்ந்தவர் வள்ளியம்மை (வயது 75). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வள்ளியம்மையின் சேலையில் தீப்பிடித்து, உடல் முழுவதும் பரவியது. தீயில் கருகிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மூதாட்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனி்ன்றி நேற்று வள்ளியம்மை இறந்தார். இதுகுறித்து வள்ளியம்மையின் மகன் ராமலிங்கம் (48) கொடுத்துள்ள புகாரின் பேரில் வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்