புவனகிரி அருகேதீயில் கருகி மூதாட்டி பலி
புவனகிரி அருகே தீயில் கருகி மூதாட்டி பலியானார்.
புவனகிரி,
சேலையில் தீப்பற்றியது
புவனகிரி அருகே உள்ள வடக்குத்திட்டை கிராமத்தை சேர்ந்தவர் வரதன். இவருடைய மனைவி கமலம் (வயது 80). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் விளக்கு ஏற்றினார். அப்போது எதிர்பாராதவிதமாக தீ, அவருடைய சேலையில் பற்றி மளமள எரிந்தது. இதனால் கமலம் வலியால் அலறி துடித்தார்.
இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, தீயை அணைத்ததுடன், உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த கமலத்தை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சாவு
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கமலம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.