ஏரியில் துணி துவைக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி சாவு
ஏரியில் துணி துவைக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பேரளி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(வயது 80). இவர் நேற்று முன்தினம் துணி துவைப்பதற்காக அருகில் உள்ள பேரளி ஊர் ஏரிக்கு சென்றுள்ளார். அங்கு துணிகளை துவைத்து கொண்டு இருக்கும்போது அவர் கொண்டு வந்த கூடை தண்ணீரிக்குள் சென்றுள்ளது. அதை எடுப்பதற்காக ஏரிக்குள் குதித்தார். அப்போது எதிர்பாராதமாக ஏரியில் மூழ்கி இறந்தார். இதை அறிந்த உறவினர்கள் பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிருஷ்ணசாமியை இறந்த நிலையில் பிணமாக மீட்டனர். மேலும் இது குறித்து கிருஷ்ணசாமியின் மனைவி பட்டு கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் கிருஷ்ணசாமியின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.