லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது
பொள்ளாச்சியில் லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பூ மார்க்கெட் பகுதியில் நகர கிழக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த நபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பொள்ளாச்சி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த ரவிகுமார் (வயது 63) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 247 லாட்டரி சீட்டுக்கள், ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டது.