குளித்தலை அருகே உள்ள சிவாயம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மதுவிற்ற மேலபட்டியைச் சேர்ந்த வையாபுரி (வயது 72) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 6 மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.