மது விற்ற முதியவர் கைது

மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-22 18:45 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னவளையம் ஏரி அருகே பதுக்கி வைத்து மது பாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த முதியவரை பிடித்து விசாரித்ததில் அவர் சின்னவளையம் வடக்கு காலனி தெருவை சேர்ந்த சம்பந்தம் (வயது 67) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 30 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார், சம்பந்தம் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்