நிலக்கோட்டை அருகே முதியவரை கட்டிபோட்டு ஆடுகள் திருட்டு

நிலக்கோட்டை அருகே முதியவரை கட்டிபோட்டு ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2022-09-02 18:47 GMT

நிலக்கோட்டை அருகே உள்ள ஆர்.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 70). இவர், ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர், வீட்டில் உள்ள தொழுவத்தில் ஆடுகளை அடைத்து விட்டு அதன் அருகில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது தலையில் சாக்கு பையை போட்டு மூடினர். மேலும் அவரது கை, கால்களை போர்வையால் கட்டினா். பின்னர் மர்ம நபர்கள் தொழுவத்தில் கட்டியிருந்த ஆடுகளை வேனில் திருடி சென்றனர். இதையடுத்து சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடி வந்தனர். அவர்கள் கிருஷ்ணனின் கை, கால்களில் கட்டியிருந்த கட்டுகள் மற்றும் தலையில் மூடியிருந்த சாக்குப்பையை எடுத்தனர்.

பின்னர் அவர்கள் ஆடுகளை திருடி சென்ற திசை நோக்கி ஓடினர். அப்போது அந்த பகுதியில் ஆடுகள் சுற்றி திரிந்து கொண்டிருந்தன. அதனை கிருஷ்ணன் மீட்டு கொண்டு வந்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் பொதுமக்கள் ஓடி வருவதை கண்ட மா்ம நபர்கள் திருடியதில் 40 ஆடுகளை வேனில் எற்றி கொண்டு பாதியை விட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணன் விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்