கியாஸ் சிலிண்டர் வெடித்து முதியவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து முதியவர் பலியானார்.

Update: 2022-08-16 19:44 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பரமசிவம் நாடார் தெருவை சேர்ந்தவர் பலவேசம் (வயது 74). இவர் வீட்டில் காப்பி போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது திடீெரன சிலிண்டர் வெடித்து பலவேசம் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்