மனு கொடுக்க வந்த முதியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

மனு கொடுக்க வந்த முதியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

Update: 2023-02-08 20:13 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக போலீஸ் சூப்பிரண்டு ஹாிகிரண் பிரசாத்திடம் கொடுத்தார்கள்.

இதற்கிடையே நாகர்கோவில் பகுதியை சோ்ந்த சுமார் 60 வயது முதியவர் ஒருவர்் உறவினர்களுடன் மனு கொடுக்க வந்தார். அவர் அலுவலக வளாகத்தின் வெளியே நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி நிலை தடுமாறி தரையில் சாய்ந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் முதியவருடன் வந்த உறவினர்கள் அவரை கைதாங்கலாக பிடித்து அங்குள்ள ஒரு டீக்கடையில் அமர வைத்தனர். பின்னர் முதியவருக்கு தண்ணீர் கொடுத்தார்கள். சற்று நேரத்தில் முதியவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்