ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வேண்டும்

விக்கிரவாண்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வேண்டும் என்று வக்கீல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-07-29 18:45 GMT

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டியில் வக்கீல்கள் சங்க பேரவை கூட்டம் சங்கத் தலைவர் சங்கரன் தலைமையில் நடந்தது. செயல் தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். செயலாளர் வீரவேல் வரவேற்றார். இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விக்கிரவாண்டியில் வாடகை கட்டடத்தில் நீதி மன்றம் இயங்கி வருகிறது. எனவே புதிய ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் கட்ட வேண்டும், புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை திறக்க வேண்டும், விக்கிரவாண்டியில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை திறக்க வேண்டும், கண்டமங்கலம், கடையம், கோழிப்பண்ணை பகுதியில் இருந்து விக்கிரவாண்டிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்