தனியார் நிதி நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

புதுக்கோட்டையில் தனியார் நிதி நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அது தொடர்பாக நிறுவன மேலாளர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-05 18:45 GMT

புதுக்கோட்டையில் தனியார் நிதி நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அது தொடர்பாக நிறுவன மேலாளர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிதிநிறுவன ஊழியர்

தூத்துக்குடி அருகே உள்ள அரியநாயகிபுரம், தெய்வகனி தெருவை சேர்ந்தவர் ராமர். இவருடைய மகன் ஆறுமுக இசைராஜ் (வயது 23). இவர் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் முகவராக பணியாற்றி வந்தார். இவர், அந்தப் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினருக்கு நிதி நிறுவனத்தில் இருந்து கடன் வாங்கி கொடுத்து இருந்தாராம். அந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் கடன் தொகையை சரியாக திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் நிதி நிறுவனத்தினர், மகளிர் குழுவினர் வாங்கிய கடனுக்கு நீங்கள் தான் பொறுப்பு, அந்த பணத்தை நீங்கள் தான் செலுத்த வேண்டும் என ஆறுமுக இசைராஜை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆறுமுக இசைராஜ் தனது நண்பர் ஒருவரிடம் இருந்து 4 பவுன் தங்க நகையை வாங்கி, அதனை மற்றொரு நிதி நிறுவனத்தில் அடகு வைத்து ரூ.85 ஆயிரம் பணத்தை பெற்று அதனை தனது நிதி நிறுவனத்தில் செலுத்தினாராம். அதன்பிறகும் கடன் தொகை முழுவதையும் திருப்பி செலுத்துமாறு நிதி நிறுவனத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

தற்கொலை

இதனால் மனம் உடைந்த ஆறுமுக இசைராஜ் சம்பவத்தன்று இரவு, தான் வேலைபார்த்து வந்த நிதிநிறுவன அலுவலகத்தின் மாடியில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, நிதி நிறுவனத்தின் ஏரியா மேலாளர் மதன் பிரபு, யூனிட் மேலாளர் மனு மாரியப்பன், பொதுமேலாளர் மகேஷ் ரவி ஆகிய 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்