ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்

குழித்துறையில் ஆற்றில் குளிக்க இறங்கிய போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தனியார் நிறுவன ஊழியரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Update: 2023-09-22 18:45 GMT

குழித்துறை:

குழித்துறையில் ஆற்றில் குளிக்க இறங்கிய போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தனியார் நிறுவன ஊழியரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

தனியார் நிறுவன ஊழியர்

திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது68). இவர் குழித்துறையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதற்காக குழித்துறை பகுதியில் தங்கியுள்ளார். இந்தநிலையில் ராதாகிருஷ்ணன் நேற்று காலையில் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார்.

தற்போது பெய்து வரும் மழையால் ஆற்றில் தடுப்பணை மூழ்கிய நிலையில் கணிசமான அளவு தண்ணீர் பாய்கிறது. இந்தநிலையில் ராதாகிருஷ்ணன் தடுப்பணை பகுதியில் குளிக்க இறங்கிய போது எதிர்பாராமல் ஆற்றுக்குள் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்டார். அவர் அந்த பகுதியில் வளர்ந்து நின்ற செடி, ெகாடிகளை பிடித்த வண்ணம் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார்.

தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அதிகாரி சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் ராதாகிருஷ்ணனை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்