கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு

Update: 2023-05-06 19:15 GMT

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது33). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர் சிவக்குமார் என்பவருடன் கல்லணையை சுற்றி பார்க்க வந்தார். பின்னர் சிவகுமாரை மணலில் உட்கார வைத்துவிட்டு, பாலகிருஷ்ணன் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதால் பாலகிருஷ்ணன் தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் உடனடியாக போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத்துறை அலுவலர் சகாயராஜ், போக்குவரத்து அலுவலர் முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது ஆற்றில் மூழ்கி இறந்த பாலகிருஷ்ணன் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதுகுறித்து தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யா பிள்ளை விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்