விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு
விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.
திருப்புவனம்,
திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் பார்த்திபன்(வயது 35). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் மதுரையில் இருந்து திருப்புவனம் அருகே வில்லியாரேந்தல் விலக்கு அருகே மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவ்வழியாக வந்தவர்கள் பார்த்திபனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பார்த்திபன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.