கிணற்றில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் சாவு

கிணற்றில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-08-13 18:51 GMT

அரவக்குறிச்சி அருகே வல்லப்பம்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணுசந்தர் (வயது 27). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக தனது வீட்டில் இருந்தே பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது தோட்டத்திற்கு செல்வதாக கூறிச் சென்றார். பின்னர் வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவரது தாய் சாரதாமணி தோட்டத்து பகுதிக்கு சென்று தேடிபார்த்தும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் சந்தேகத்தின்பேரில் அங்கிருந்த கிணற்றை எட்டிபார்த்தார். அப்போது விஷ்ணுசந்தர் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இதுகுறித்து சாரதாமணி அரவக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஷ்ணுசந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தசம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்