திருவாலங்காடு அருகே கடன் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

திருவாலங்காடு அருகே கடன் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-09 09:37 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரெயில் நிலையம் அடுத்த சின்னம்மாபேட்டை தாங்கல் ஏரி அருகே ஆண் பிணம் கிடப்பதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் பாண்டியநல்லூர் அடுத்த போடப்பறையை சேர்ந்த பூவேந்தன் (வயது 39) என்பதும் அவர் அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியதும் தெரிந்தது.

கடந்த சில மாதங்களாகவே கடன் பிரச்சினையால் பூவேந்தன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு ரெயிலில் வந்து கொண்டிருந்தார். திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் இறங்கி பின்னர் சின்னம்மாபேட்டை தாங்கல் ஏரி அருகே சென்று அவரது பையில் வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பூவேந்தனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்