விபத்தில் மின் ஊழியர் பலி
திருச்சுழி அருகே விபத்தில் மின் ஊழியர் பலியானார்.
திருச்சுழி
திருச்சுழி அருகே கல்லூரணி மேலத்தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது56). இவர் பரளச்சி மின்சார வாரியத்தில் வயர்மேன் ஆக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் இவர் பணிைய முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் சாயல்குடி - அருப்புக்கோட்டை சாலையில் சிலுக்கப்பட்டி காலனி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது அவர் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்த்தனர். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.