ஏ.டி.எம். மையம் முன்பு தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் பைக்
தொப்பூரில் ஏ.டி.எம். மையம் முன்பு நிறுத்தி வைத்திருந்த எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்தது.
நல்லம்பள்ளி
எலக்ட்ரிக் பைக்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது38). இவர் நேற்று தொப்பூருக்கு எலக்ட்ரிக் பைக்கில் சென்றார். தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையம் முன்பு, எலக்ட்ரிக் பைக்கை நிறுத்தி விட்டு பணம் எடுக்க சென்றார். அப்போது திடீரென எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், அங்கு நிறுத்தப்பட்ட வாகனங்களை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் எலக்ட்ரிக் பைக் முழுமையாக எரிந்து சேதமானது.
விசாரணை
இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். மையம் முன்பு நிறுத்திய எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.