'மகளே உனக்காக' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

‘மகளே உனக்காக' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-08-10 19:30 GMT

பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையிலும், போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே மணக்குடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 'மகளே உனக்காக' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் தொடங்கி வைத்து, பள்ளி குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ராதை, மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகா குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வி சேவியர், ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் திருமுருகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்