ரூ.10 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி
ரூ.10 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதக தி.மு.க. பிரமுகர் மீது புகார் செய்யப்பட்டது.
அணைக்கட்டு தாலுகா மெயின் பஜார் வீதியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணி, காந்தி. இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் நேற்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்களது தந்தைகளுக்கு ஊனை வாணியம்பாடி ஏரிபுதூர் பகுதியில் சுமார் 8 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தி.மு.க. பிரமுகர் ஒருவர் அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். அங்குள்ள மண்ணை அவர் எடுத்து விற்பனை செய்கிறார். இதுகுறித்து நாங்கள் அவரிடம் கேட்டால் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுகிறார். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.