வியாபாரி வீட்டை உடைத்து திருட முயற்சி

பனவடலிசத்திரத்தில் வியாபாரி வீட்டை உடைத்து மர்மநபர்கள் திருட முயற்சித்தனர்.

Update: 2023-04-18 18:45 GMT

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவர் கேரளாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதனால் இவரது வீட்டை இவரது உறவினரான மாரிமுத்து மகன் தங்கராஜ் (வயது 32) என்பவர் பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பரமசிவம் வீட்டிற்கு தங்கராஜ் சென்றபோது கதவு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது தெரியவந்தது. வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்