ஆற்காடு அருகே ஏ.டி.எம்.மையம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

ஆற்காடு அருகே ஏ.டி.எம்.மையம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-05 19:06 GMT

ஆற்காடு

ஆற்காடு அருகே ஏ.டி.எம்.மையம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த கீழ் விஷாரம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம்.மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம்.மையம் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை அவ்வழியாக சென்ற நபர்கள் பார்த்துவிட்டு ராணிப்பேட்டை தீயணைப்புத்துறையினர் மற்றும் ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தால் ஏ.டி.எம்.மெஷின் தீயில் எரிந்து கருகியது. மேலும் இந்த திடீர் தீ விபத்திற்கு மின் கசிவு காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்தும், ஏ.டி.எம் மெஷினில் இருந்த பணம் தீயில் கருகியதா என்பது குறித்தும் ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்