கொசுக்களின் சரணாலயமாக மாறி வரும் செயற்கை நீரூற்று

கொசுக்களின் சரணாலயமாக மாறி வரும் செயற்கை நீரூற்று

Update: 2023-10-16 14:19 GMT

திருப்பூர்

தமிழகத்தில் ஆங்காங்கே டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் டெங்கு கொசுக்கள் பரவுவதை தடுக்கும் வகையில் அரசு சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கொசுமருந்து அடித்தல், பொது இடங்கள், வீடுகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கும் டயர்கள், பழைய பொருட்களை அப்புறப்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் டவுன்ஹால் அருகே உள்ள அம்மா உணவகத்தின் பின்புறம் பயன்பாடின்றி காணப்படும் செயற்கை நீரூற்றில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை வெள்ளமும் இதில் தேங்கி நிற்பதால் இதில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகியுள்ளன.

ெகாசுக்களின் சரணாலயமாக மாறி வரும் இந்த நீரூற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆங்காங்கே பரவி வரும் காய்ச்சலால் மக்கள் அச்சத்துடன் உள்ள நிலையில் களத்தில் இறங்கியுள்ள மாநகராட்சி நிர்வாகம் அனைத்து பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்