கொட்டும் மழையில் நடுரோட்டில் பழுதாகி நின்ற ஆம்புலன்ஸ்

கொட்டும் மழையில் நடுரோட்டில் ஆம்புலன்ஸ் பழுதாகி நின்ற து

Update: 2022-11-11 19:36 GMT

திருச்சியில் நேற்று அதிகாலை முதலே அவ்வப்போது பலத்த மழையும், சில நேரம் சாரல் மழையுமாக பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இந்தநிலையில் நேற்று காலை மன்னார்புரம் பகுதியில் மழை காரணமாக 108 ஆம்புலன்ஸ் ஒன்று திடீரென பழுதாகி நின்று விட்டது. மீண்டும் அதனை இயக்க டிரைவர் முயன்றும் முடியவில்லை. அந்த ஆம்புலன்சில் நோயாளிகள் யாரும் இல்லை. கொட்டும் மழையில் ஆம்புலன்ஸ் நடுரோட்டில் நின்றதால் வேறு வழியின்றி ஆம்புலன்சில் இருந்த பெண் மருத்துவ உதவியாளரும், அங்கு வந்த மற்றொருவரும் சேர்ந்து ஆம்புலன்சை தள்ளிவிட்டனர். அதன்பிறகே ஆம்புலன்ஸ் இயங்கியது. ஆம்புலன்சுக்கே முதலுதவி செய்ய வேண்டியிருக்கிறது என்று அந்த வழியாக சென்றவர்கள் வேதனையுடன் கூறிச்சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்