தபால்களை எடுத்துச்செல்ல கூடுதல் வாகனம்

தபால்களை எடுத்துச்செல்ல கூடுதல் வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.

Update: 2023-06-15 20:18 GMT

திருச்சி தலைமை அஞ்சலக வளாகத்தில் அஞ்சல் பைகளை ஏற்றிச்செல்லும் மெயில் மோட்டார் வாகன சேவை மையம் இயங்கி வருகிறது. திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டங்களில் உள்ள அஞ்சலகங்களுக்கு திருச்சி ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் இருந்து விரைவு தபால்கள், பதிவு செய்யப்பட்ட தபால்கள் மற்றும் பதிவு செய்யப்படாத தபால்களை கொண்ட தபால் பைகள், தற்போது 8 வாகனங்கள் மூலமாக பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களின் கூடுதல் வசதிக்காக மேலும் ஒரு புதிய மெயில் மோட்டார் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தை மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் டி.நிர்மலா தேவி நேற்று மாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதுநிலை அஞ்சல் அதிகாரி தமிழினி, உதவி இயக்குனர் பிரதீப்குமார், திருச்சி தலைமை அஞ்சல் நிலைய ஊழியர்கள், மெயில் மோட்டார் வாகன மைய டிரைவர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஸ்டோர் கீப்பர் ஹரிஹரசுதன் செய்திருந்தார். இந்த வாகனம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திருச்சியில் இருந்து காட்டுப்புத்தூர் வரையிலான அஞ்சல் வழித்தடத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களுக்கும் தபால் பைகளை ஏற்றி செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை திருச்சி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்