கூடுதலாக 300 பேருக்கு வேலை அடையாள அட்டை வழங்க வேண்டும்

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கூடுதலாக 300 பேருக்கு வேலை அடையாள அட்டை வழங்க வேண்டும்;ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை

Update: 2023-07-24 18:45 GMT

கொள்ளிடம்:

அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் மல்லியம்இமயவேல், மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கொள்ளிடம் அருகே உள்ள அரசூர் ஊராட்சியை சேர்ந்த அரசூர், காப்பியகுடி, கீழரசூர், மணலகரம், கண்டிராஜநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை சுத்தம் செய்தல், ஊராட்சி பொது குளம் தூர்வாருதல், பாசன கிளை வாய்க்கால்கள் தூர்வாருதல் மற்றும் சாலை ஓரமுள்ள முட்புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஊராட்சியைச் சேர்ந்த பெரும்பாலானோர் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இங்கு 300-க்கும் மேற்பட்டோருக்கு அடையாள அட்டை இல்லாமல் இருந்து வருவதால் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் வேலையில் ஈடுபட முடியாமல் இருந்து வருகின்றனர். வேலையில் ஈடுபடுவதற்கு வேலை அடையாள அட்டை பெற்றிருந்தால் மட்டுமே வேளையில் ஈடுபட முடியும். அடையாள அட்டை இல்லாமல் இருந்து வருவதால் வேலையில் ஈடுபட முடியாமல் ஏழ்மையாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிரமத்தில் இருந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்